தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்நத மீனா தான் குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல் தற்போதுவரை உள்ள புகைப்படங்கள் பற்றிய தொகுப்பு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. ரஜினி,கமல், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தற்போதும் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளம் மற்றும் தெலுங்கில் வெளியான த்ரிஷ்யம் 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது தெலுங்கில் சன் ஆஃப் இந்தியா, தமிழில் ரவுடி பேபி, மலையாளத்தில் ஜனம்மா டேவிட்ட உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்யாசாகர், நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் கிடைக்காததால்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த இழப்பில் இருந்து மீனா தற்போது மீண்டு வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அவர் மறுமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு மீனா தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகிவில்லை. இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மீனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானத்தில் இருந்து தற்போது அம்மா நடிகையாக உள்ளது வரையாக புகைப்படங்களை வரிசைபடுத்தியுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil