scorecardresearch

கர்ப்பிணியாக நடிகை மீனா: ‘முன்பைவிட இப்போ இது கஷ்டம்

Tamil Cinema Update : தமிழில் தற்போது ரவுடி பேபி என்ற படத்தில் நடித்து வரும் மீனா அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கர்ப்பிணியாக நடிகை மீனா: ‘முன்பைவிட இப்போ இது கஷ்டம்

Tamil Cinema Actress Meena Viral Video Update : 90 களில் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. 1982-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான நெஞ்சஙகள் படத்தில் குழந்தை நட்தச்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்திய உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

1990-ம் ஆண்டு தெலுங்கில், வெளியான நவயுகம் படத்தில் நாயகியாக அறிமுகமான மீனா, தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நட்த்திரங்களுக்கு ஜோடியாக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், கார்த்தி பிரபு உள்ளிட்ட பல நடிர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் மீனா, மலையாளத்தில் வெளியான த்ரிஷயம் மற்றும் த்ரிஷயம் 2 படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் தற்போது ரவுடி பேபி என்ற படத்தில் நடித்து வரும் மீனா அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், கர்ப்பமாக இருப்பது போன்று கையை வயிற்றில் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுவது போன்று வீடியோ வெளியிட்டு்ளளார். இந்த வீடியோவில், இவ்வளவு மாறிவிட்டது. இந்த கெட் அப் அணிவது அப்போது எளிதாக இருந்தது.அதை மறைப்பதற்காக எப்பொழுதும் கனமான புடவைகளை அணிவது வழக்கம்.

ஆனால் இப்போது, எழும்பும் தோற்றத்திற்கும், உணர்விற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இயற்கையாகத் தோற்றமளிக்க வேண்டும் மற்றும் சிஃப்பான் புடவைகள் கூட அணியலாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், உங்களின் டெடிகேஷன் மெய் சிலிர்க்க வைக்கிறது என கருத்தக்களை பதிவிட்டு வருகினறனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress meena instagram video viral on social media