65 வயது நடிகருக்கு ஜோடியாக மீனா: அவரே வெளியிட்ட போட்டோ

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி கமல், மம்முட்டி மோகன்லால், விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

90-களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த மீனா 32 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு நடிகருடன் ஜோடி சேர உள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை மீனா. 1985-ம் ஆண்டு சிவாஜி கனேசன் நடிப்பல் வெளியான நெஞ்சங்கள் படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகனமான இவர், 1990-ம் ஆண்டு வெளியான நவயுகம் படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்தார்.

தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி கமல், மம்முட்டி மோகன்லால், விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்தி வரும் மீனா கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்திருப்பார்.

இந்நிலையில் நடிகை மீனா தற்போது தனது முதல்பட நாயகன் ராஜேந்திர பிரசாத்துடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக அவரே தனது சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகாரன மோகன்பாவுடன் இணைந்து சன் ஆஃப் இந்திய என்ற படத்தில் மீனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress meena join to pair rajendra prased after 32 years