90-களில் முன்னணி நடிகையாக, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நடிகை மீனா, நீச்சல் உடை அணிந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் உச்ச நடிகையாக வளர்ந்தவர் தான் மீனா. தெலுங்கில் நாயகியாக அறிமுகமான இவர், 90-களின் தொடக்கத்தில் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். ராஜ்கிரன் நாயககனாக நடித்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்ற, மீனா, ரஜினிகாந்துடன், எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட சில படங்களில் ரஜினிகாந்தின் மகள் கேரக்டரில் நடித்திருந்த மீனா, 3 படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த 3 படங்களுமே பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதேபோல் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த தெனாலி படமும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்துடன் மீனா பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இதில் பெரியண்ணா, சேதுபதி ஐபிஎஸ், உளவுத்துறை, வானத்தைபோல, உள்ளிட்ட படங்களில் பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தாலும், மீனா க்ளாமர் மற்றும் நீச்சல் உடைகளில் அதிகம் நடித்ததில்லை.
இதனிடையே நாம் இருவர் நமக்கு இருவர் டபுள்ஸ் ஆகிய இரு படங்களில் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்த மீனா இதில் ஒரு படத்தில் நீச்சல் உடையில் நடித்திருப்பார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறிய அவர், நான் நீச்சல் உடையில் நடிக்க விரும்பவில்லை. ஆனாலும் எனக்கு நெருக்கமானவர்கள் நீங்கள் ஏன் அந்த உடையில் நடிக்க முயற்சிக்க கூடாது என்று கேட்டதால், எனக்கும் நீச்சல் உடையில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது.
அதன் காரணமாகத்தான் பிரபுதேவா படத்தில் அந்த உடையில் நடிக்க முயற்சி செய்தேன். அந்த காட்சியில் நடிப்பதற்கு முன்னாள் நீச்சல் உடை அணிந்து என்னால் மேக்கப் ரூமை விட்டு வெளியில் வரவே முடியவில்லை. அவ்வளவு நெருடலாக இருந்தது. எப்படி செல்வது என்ற கூச்சமும் இருந்தது. அப்போது தான் இந்த உடையில் நடிக்கும் நடிகைள் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என மீனா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“