Advertisment

மீண்டு வந்த நடிகை மீரா ஜாஸ்மின்... 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி

மிரா ஜாஸ்மின் 2002-ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மீண்டு வந்த நடிகை மீரா ஜாஸ்மின்... 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின் 10 ஆண்டுகளுக்கு பிறகு விமானம் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Advertisment

2001-ம் மலையாளததில் வெளியான சூத்திரதரன் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். தொடர்ந்து 2002-ம் ஆண்டு தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, விஜயகாந்துடன் மரியாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ள மீரா ஜாஸ்மின் தமிழில் கடைசியாக விஞ்ஞானி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2014-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு மலையாளத்தில் மட்டும் நடித்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது விமானம் என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ-என்டரி கொடுக்க உள்ளார்.

மீரா ஜாஸ்மின் இன்று தனது 40 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜீ ஸ்டுடியோஸ் சவுத் தனது ட்விட்டரில் இந்த படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வெளியிட்டுள்ள பதிவில். அவர் மீண்டும் வந்தார்! எப்போதும் வசீகரிக்கும் மீரா ஜாஸ்மினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு அவர் விமானம் படத்தில் தனது நடிப்புதிறமையின் மூலம் வலிமை சேர்பபார். கே.கே (KK)  கிரியேட்டிவ் வொர்க் உடன் இணைந்து எங்களின் அடுத்த தெலுங்கு-தமிழ் இருமொழித் திரைப்படம். மீரா மமுன்னெப்போதையும் விட சிறந்த பங்களிப்பை கொடுப்பார் என்று எங்களுக்குத் தெரியும் என்று பதிவிட்டுள்ளனர்.

அதே சமயம் விமானம் படத்தின் நடிகர்கள் மற்றும் பிற விவரங்கள் தயாரிப்பாளர்களால் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மீரா ஜாஸ்மின் தெலுங்கில் கடைசியாக மோக்ஷா (2013) என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment