/indian-express-tamil/media/media_files/2025/09/04/srividya-mohini-2025-09-04-10-54-05.jpg)
படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் தேவையில்லாமல் யாராவது பேசினால், அவள் என் குடும்ப பெண் இந்த பேச்சு எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சிக்கோ என்று அவர்களிடம் சொல்வார் என்று நடிகை ஸ்ரீவித்யா குறித்து நடிகை மோகினி நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில், தனது காந்த கண்களால் பலரின் கவனத்தை ஈர்த்த நடிகைகளில் முக்கியமானவர் மோகினி. 1987-ம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளியான கூட்டுப்புழுக்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்து 1991-ம் ஆண்டு வெளியான ஈராமான ரோஜாவே படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது. படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரிய ஹிட் பாடல்கள் தான்.
கேயார் இயக்கத்தில் வெளியான இந்த படம் இந்தியில் அபி அபி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றுது. இந்த படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணாவுடன் ஆதித்யா 369 படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழில், பார்த்திபனுடன் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், கார்த்திக்குடன் நாடோடி பாட்டுக்காரன், பிரஷாந்தின் உனக்காக பிறந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்,
குறிப்பாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான தாயகம் என்ற படத்தில், அபிராமி என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் சின்ன மருமகள், புதிய மன்னர்கள் உள்ளிட்ட படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டரில் நடித்த மோகினி, ‘நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் கசங்கி போனேனே’ என்ற பாடல் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது. கடைசியாக 2007-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை என்ற படத்தில் நடித்திருந்தார்,
தற்போது சினிமாவில் இருந்து விலகியுள்ள அவர், சமீபத்தில் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகை ஸ்ரீவித்யா குறித்து சுவாரஸ்யமாக நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அதில், ஸ்ரீவித்யா அம்மா ஒரு மூத்த நடிகை என்ற பார்வையில் என்னுடன் பழகியதே இல்லை. அவருடன் எனக்கு ஷூட்டிங் இருந்தால் அவர் வீட்டில் இருந்து எனக்கும் சேர்த்து சாப்பாடு வரும். அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கூட. நீ திருவனந்தபுரம் வந்தால் என்னை கூப்பிடு, நான் உனக்கு சாப்பாடு அனுப்புகிறேன். ஷூட்டிங் சாப்பாடு உனக்கு பிடிக்காதே என்று சொன்னார்.
இப்படி சொல்லிவிட்டு நான் அடுத்து ஷூட்டிங் போவதற்குள் அவர் இறந்துவிட்டார். பெரிய இழப்பு இது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும். தெய்வ நம்பிக்கை இருப்பவர். மற்றவர்களுக்கு நல்லது செய்தாலும் அது வெளியில் தெரியாமல் செய்வார். செட்டில் நிறைய சொல்லித்தருவார். யாராவது என்னிடம் வந்து அனாவசியமாக பேசினால், ஏய் அது என் வீட்டு போன்று, வேற யாராவது கிடைத்தால் அங்க போய் பேசு போ என்று சொல்வார். அழகு என்றால் அவர் தான் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.