/indian-express-tamil/media/media_files/2025/09/11/tamil-cinema-rk-selvamani-mohini-2025-09-11-19-40-48.jpg)
விஜயகாந்த் நடிப்பில், வெளியான புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என தொடர்ந்து 2 வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தன்னை கட்டாயப்படுத்தி கவர்ச்சியாக நடிக்க வைத்ததாகவும், நான் விருப்பமே இல்லாமல் கவர்ச்சியாக நடித்த ஒரே படம் இதுதான் என்றும் நடிகை மோகினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், தனது காந்த கண்களால் பலரின் கவனத்தை ஈர்த்த நடிகைகளில் முக்கியமானவர் மோகினி. 1987-ம் ஆண்டு ரகுவரன் நடிப்பில் வெளியான கூட்டுப்புழுக்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்து 1991-ம் ஆண்டு வெளியான ஈராமான ரோஜாவே படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது. படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரிய ஹிட் பாடல்கள் தான்.
இந்த படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணாவுடன் ஆதித்யா 369 படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழில், பார்த்திபனுடன் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், கார்த்திக்குடன் நாடோடி பாட்டுக்காரன், பிரஷாந்தின் உனக்காக பிறந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான கண்மணி என்ற படத்தில் பிரஷாந்துடன் இணைந்து நடித்திருப்பார்.
பி.கலைமணி கதை எழுதிய இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். இந்த படம் குறித்து அவள் விகடன் யூடியூப் செனலுக்கு மோகினி அளித்த பேட்டியில், இந்த படத்தில் நாங்கள் போட்ட சண்டை எனக்கும் செல்வமணி சாருக்கு மட்டும் தான் தெரியும். இந்த சண்டையால் அரைநாளில் ஷூட்டிங் நிறுத்தப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது, அவரை பொறுத்தவரை நீச்சல் உடையில் வர வேண்டும். நீச்சல் அடிக்கும்போது மடிசார் கட்டிக்கொள்ள முடியாதுல்ல என்று கேட்பார். ஆனால் நான் கடைசிவரை நீச்சல் கற்றுக்கொள்வே இல்லை.
யார் முன்னாடியும் பாதி ட்ரெஸ் போட்டு நீச்சல் கத்துக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போ நீச்சல் கற்றுகொடுப்பர்வர்களாக இருந்துவர்களில் பலரும் ஆண்கள் தான் பெண்கள் இல்லை. அதனால் நீச்சல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் அவர் என்னை வற்புறுத்தி அச்த காட்சியை படமாக்கினார். அப்போது உடல் தழுவ தழுவ என்ற பாடலை அரைநாளில் நடித்து கொடுத்தேன். அந்த பாட்டுக்கு ஒரு சீன் ஊட்டியில் படமாக்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.
அந்த படத்தில் நான் நடித்த கேரக்டர் அழகானது. ஒரு பணக்கார பெண் திமிர் பிடித்தவர் என்று மட்டும் தான் இருந்தது. ஆனால் நான் நடிக்க நடிக்க உண்மையாகவே இந்த பொண்ணு ரவுடிதான் போல என்று சொன்னார்கள். மொத்தத்தில் நான் அதிக க்ளாமர் காட்டி நடித்தபடம் என் பர்மிஷன் இல்லாமலே படமாக்கப்பட்டது. வாழ்க்கையில் எப்பாவது ஒருமுறை இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று மோகினி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us