தமிழில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தாமிரபரணி. இயக்குநர் ஹரி இயக்கதிய இந்த படத்தில், விஷால் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர் முக்தா (பானு). கேரளாவை சேர்ந்த இவர், அதனைத் தொடர்ந்து அழகர்மலை, சட்டசப்படி குற்றம், வாய்மை, பாம்புசட்டை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு வெளியான சகுந்தலையன் காதலன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்த முக்தா தற்போது தனது கவனத்தை சீரியல் பக்கம் திருப்பியுள்ளார். தமிழில் சந்திரகுமாரி சீரயலில் நடித்த அவர் தற்போது விஜய் டிவியின் வரலாற்று தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய டிவியில் ஒளிபரப்பாகும் வாரலாற்று தொடரான வேலம்மா என்ற பெயரில் ராணி ஊமையால் என்ற கதாப்பாத்திரத்தில் முக்தா நடித்து வருகிறார். விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் தமிழ் நடிகர் விக்னேஷ் மற்றும் முன்னாள் முன்னணி நடிகையான அம்பிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனா.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil