சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகள் என்பதை தாண்டி பல நடிகைகள் சொந்தமாக தொழில் செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது மைனா நந்தினி இறங்கியுள்ளார்.
2/10
2009-ம் ஆண்டு வெளியான வென்னிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மைனா நந்தினி. அதன்பிறகு வம்சம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
3/10
கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளக்கார துரை, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3 விக்ரம், விருமன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
4/10
கடைசியாக பார்ட்னர் என்ற படத்தில் நடித்த இவர், சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியலிகளில் நடித்துள்ளார். சமையல் மந்திரம் நிகழ்ச்சி இவரின் அறிமுக நிகழ்ச்சியாகும்.
5/10
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பங்கேற்ற, மைனா நந்தினி, 103 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில், 4-வது இடம் பிடித்திருந்தார். இதில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
6/10
Advertisment
Advertisement
7/10
2012-ம் ஆண்டு சன்டிவியின் அழகி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், அதன்பிறகு, சரவணன் மீனாட்சி சீசன் மற்றும் சீசன் 3-ல் நாயகியாக நடித்திருந்தார்.
8/10
சமீபத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸ் நடித்திருந்த மைனா நந்தினி, தற்போது புதிய தொழில் தொடங்கி இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
9/10
நடிகைகள் பலரும் சொந்தமாக தொழில் தொடங்கி வரும் இந்த காலக்கட்டத்தில் மைனா நந்தினி பொன்னூஞ்சல் சேரிஸ் என்ற புடவை தொழிலை தொடங்கியுள்ளார்.
10/10
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.