உங்களுக்கு வயசு ஆகுமா ஆகாதா...? நடிகை நதியா ரீசன்ட் க்ளிக்ஸ்

1994-ம் ஆண்டுக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காத நதியா 10 வருட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் படத்தில் அவருக்கு அம்மாவாக தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

1994-ம் ஆண்டுக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காத நதியா 10 வருட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் படத்தில் அவருக்கு அம்மாவாக தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

author-image
WebDesk
New Update
Actress nadia

நடிகை நதியா ரீசன்ட் போட்டோஸ்

56 வயதை கடந்தாலும் இன்னும் இளமையாக காட்சி அளிக்கும் நடிகை நதியா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், உங்கள் அழகின் ரகசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment
Actress Nadia (1)
நடிகை நதியா

1984-ம் ஆண்டு வெளியான நோக்கிதா தூரத்து கண்ணு நாட்டு என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நதியா. முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்காக பிலிம்பேர் விருது பெற்ற இவர், பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Actress Nadia (4)
என்றும் இளமை நதியா
Advertisment
Advertisements

அதனைத் தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த நதியா, தமிழில் நிலவே மலரே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா, ராஜகுமாரான், சின்ன மேடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Actress Nadia (3)
தமிழ் நடிகை நதியா

1994-ம் ஆண்டுக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காத நதியா 10 வருட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம்.குமரன் படத்தில் அவருக்கு அம்மாவாக தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு தாமிரபரணி, சண்டை, பட்டாளம், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

Actress Nadia (2)
பூவே பூச்சூடவா நதியா

சமீபத்தில் வெளியான தி வாரியர் படத்தில் நாயகனின் அம்மாவாக நடித்திருந்த நதியா தற்போது தோனி தயாரிப்பில் எல்ஜிஎம் படத்தில் நடித்துள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக் இருக்கும் நடிகை நிதியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: