/indian-express-tamil/media/media_files/2025/09/10/nalini-m-2025-09-10-13-27-47.jpg)
80 -90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நளினி தனது கர்ப்பகாலம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்து கலக்கியவர் நடிகை நளினி. 1980- 90 காலக்கட்டங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மோகன் லால், சத்யராஜ், விஜயகாந்த், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். இவரும் நடிகர் மோகனும் நடித்திருந்த ‘நூறாவது நாள்’ திரைப்படம் தற்போது வரை பேசும் படமாக அமைந்தது.
இவர் நடிகர் ராமராஜனை திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2000-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். ராமராஜன் - நளினி தம்பதியருக்கு அருணா, அருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நளினி பின்னர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.
இவர் நடித்த ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து பல தொடர்களில் நளினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சாமி பக்தி அதிகம் கொண்ட நடிகை நளினி, கோயில்களுக்கு அடிக்கடி சென்று வேண்டுதல் செய்வது வழக்கம். அண்மையில் ஆடி மாதம் பிறந்ததையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் வழிப்பட்ட அவர் பின்னர் கோயில் வளாகத்தில் மடிப்பிச்சை ஏந்தினார்.
அம்மன் தனது கனவில் வந்து எனக்காக என்ன செய்யப்போகிறார் என்று கேட்டதால் மடிப்பிச்சை ஏந்தி அதில் வரும் பணத்தை திருப்பணிக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தார். அண்மையில் பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை நளினி தனது கர்ப்பகாலம் குறித்து கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “என் கர்ப்பகாலத்தின் போது மறக்க முடியாத பல நிகழ்வுகள் நடந்தது. முதலில் எனக்கு இரட்டை குழந்தைகள் என்று தெரியாது.
என் வயிறு மிகவும் பெரிதாக இருந்தது. அப்போது மருத்துவர் சொன்னார் உனக்கு இரட்டை குழந்தைகள் இல்லை மூன்று குழந்தைகள் போன்று தெரிகிறது என்றார். அப்பறம் பார்த்தால் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அடுத்து குழந்தைகள் வேண்டவே வேண்டாம் என்ற முடிவில் இருந்தேன். என் குழந்தைகள் இரண்டு பேருக்கும் ஒரு நொடி தான் வித்தியாசம். இரண்டு மருத்துவர்களை வைத்து ஒரே மாதிரியாக குழந்தைகளை வெளியில் எடுத்தோம்.” என்றார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.