/indian-express-tamil/media/media_files/2025/08/24/nalini-sadhana-2025-08-24-09-36-33.jpg)
எங்கள் இருவருக்கும் 43 ஆண்டு கால நட்பு இன்னும் தொடர்கிறது. எங்கள் பிள்ளைகளிடமும் இந்த நட்பு இன்னும் இருக்கிறது என்ற நடிகை நளினி மற்றும் சாதனா கூறியுள்ளனர்.
தமிழ் சினிமா, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய நடிகைதான் நளினி. இவர் 1980களில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக இருந்தார். மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ராமராஜனை திருமணம் செய்து பின்னர் 2000ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.
இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்த நளினி, தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும, அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வரும் நளினி பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசி வருகிறார்.
அதேபோல், 1982-ம் ஆண்டு ஹிட்லர் உமாநாத் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாதனா, நானும் ஒரு தொழிலாளி, மை டியர் லிசா, என்ன பெத்த ராசா, வெற்றி கரங்கள், நெஞ்சினிலே, சினேகிதியே, புதிய கீதை தொட்டி ஜெயா உள்ளிட்ட பல வெற்றிபடங்களில் நடித்திருந்த இவர், கடைசியாக நினைத்தது யாரோ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் சாதனா, ஜீ தமிழின் மாரி சீரியிலில் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதனிடையே ஓவிய கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நடிகை நளினி - சாதனா இருவரும் பங்கேற்றிருந்த நிலையில், தங்களது 43 ஆண்டுகால நட்பு குறித்து பகிர்ந்தகொண்டனர். இதில் பேசிய, நளினி, இந்த நட்புக்கு, சாதனாவின் பாட்டிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர் சாதனாவை யாருடனும் பழக விடமாட்டார். அவருக்கு பிடித்தது நான் மட்டும் தான். எந்த நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார் என்ற நளினி கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் பற்றி பேசிய நளினி, என்றும் அவர் தான் சூப்பர் ஸ்டார். 50 வருடம் என்பது யாருக்கும் அமையாது. அவர் வேண்டாம் வேண்டாம் என்ற சொன்னாலும், நாம் அவரை அழைத்து வந்து கொண்டாடுகிறோம். 50 வருடம் என்பது இனி யாருக்கும் அமையப்போவது இல்லை என்ற கூறியுள்ளார். தொடர்ந்து சாதனா பற்றி பேசிய நளினி, எங்களுக்குள் 43 வருட நட்பு. அவள் எங்கு கூப்பிட்டாலும் நான் போவேன். நான் எங்கு கூப்பிட்டாலும் அவள் வருவாள். எனது வளர்ப்பு பெண் நந்தினியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறாள். புடவை கண்காட்சி என்றால் முந்திரி கொட்டை மாதிரி போவாள். ஆனால் இதற்கும் வந்திருக்கிறாள்.
சாதனா பேசும்போது என் மகளின் பிறந்த நாளும் நளினியின் பிறந்த நாளும் ஒரே நாள். இதனால் அவர்கள் இருவருக்கும் பிணைப்பு அதிகம் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.