உங்களுக்கு 100 கோடி பட்ஜெட், நல்ல இசையமைப்பாளர்கள் யாரும் தேவையில்லை. கதை இருந்தால் தமிழ்நாட்டில் படம் வெற்றிபெறும் என்று நாற்கரப்போர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை நமீதா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
தமிழ் சினிமாவில், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை நமீதா, திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளார். அதே சமயம் படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் தற்போது நாற்கரப்போர் என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நமீதா பங்கேற்றிருந்தார். வி6 ஃபிலிம்ஸ் வேலாயுதம் தயாரிப்பில், ஸ்ரீவெற்றி இயக்கியுளள் இந்த படத்தில், ஜெயில் மற்றும் இறுகப்பற்று படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை அபர்ணாதி நாயகியாக நடித்துள்ளார். செஸ் விளையாட்டை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை நமீதா, தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்வளவு பெரிய டிமாண்ட்ஸ் கிடையாது. அவர்களுக்கு நல்ல படம் வேண்டும் என்றால் அதில் எண்டர்டெண்மெண்ட் இருக்க வேண்டும். எமோஷ்னல், செண்டிமெண்ட் அப்புறம் எதாவது மெசேஜ் இருக்க வேண்டும். உங்களுக்கு 100 கோடி பட்ஜெட் வேண்டாம். மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் கூட வேண்டாம். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பிடிக்கும்.
நம் நாட்டில் இப்போது விளையாட்டுத்துறை முன்னேற்றம் கண்டு வருகிறது, 15 வருடங்களுக்கு முன்பு இந்த முன்னேற்றம் இல்லை. தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில், மனு பார்கர் 2 பதக்கங்களை வென்றுள்ளார். செஸ் வீரர் பிரக்யாணந்தா, நம் நாட்டுக்கு கிடைத்த பெருமை. செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் நம் நாட்டின் பெருமை. குழந்தை விளையாட்டில் ஆர்வமாக இருந்தால் பெற்றோர்கள் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
விளையாட்டுத்துறை மிக பெரிய பலம். எல்லா குழந்தைகளுக்கும் விளையாட்டு மிகவும் முக்கியம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோல், உங்கள் சட்டை பாக்கெட்டில் செல்போன் வைக்காதீர்கள். அதில் இருந்து வரும் ரேடியேஷனல் இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் சட்டை பாக்கெட்டில் செல்போன் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.