/tamil-ie/media/media_files/uploads/2022/08/Nayanthara.jpg)
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 6 ஆண்டுகளாக இயக்குநரும் நடிகருமான விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும் இவர்களின் திருமணத்திற்கு வந்தவர்கள் மொபைல்போன் பயன்படுத்த கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியிட உள்ளதாகவும், இதனை இயக்குநர் கௌதம்மேனன் இயக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் திருமணம் முடிந்தவுன் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளத்தில் திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டார்.
இதனிடையே தங்களை கேட்காமல் திருமண புகைப்படங்களை வெளியிட்டதால். திருமண வீடியோவை வெளியிடும் ஒப்பந்தத்தில் இருந்து நெட்பிலிக்ஸ் பின்வாங்கிவிட்டதாகவும், இதற்காக கொடுக்கப்பட்ட தொகையை திரும்ப கேட்பதாகவும் தகவல் வெளியானது.
இதனால் நயன்தாரா திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகுமா இல்லையா என்பது குறித்து பெரிய சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான வீடியோ பதிவில், கிளிம்ப்ஸ் புகைப்படங்களை நெட்பிலிக்ஸ் வெளியிட்டுள்ளது
Cue the malems cos we're ready to dance in excitement💃
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022
Nayanthara - Beyond the fairtyle என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,விரைவில் இவர்களின் திருமணம் தொடர்பான வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil00 0“h\t-
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.