Advertisment

தமன்னா ஆடி பார்த்தீங்க... நயன்தாரா, சிம்ரன், சமந்தா வெர்ஷனில் காவாலா- செம்ம டான்ஸ் வீடியோ

காவாலா பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வரும் நிலையில், யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kavala Song

காவாலா பாடருக்கு நடனமாடும் முன்னணி நடிகைகள்

ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடலுக்கு சிம்ரன், நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடனமாடுவது போன்று ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

வரும் ஆகஸ்ட் 10-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியுள்ளார். வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் காவாலா பாடருக்கு தமன்னாவின் நடனம் பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்த பாடலை ரீல்ஸ் செய்வதோடு மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடுவது போன்ற வீடியோக்களும் வெளியாகி வருகிறது. ஏற்கனவே ஒரு குழந்தை காவாலால பாடருக்கு நடனமாடும் வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த தமன்னா, சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நடிகை சிம்ரன் இந்த பாடலுக்கு நடனமாடுவது போன்று வெளியான வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

அந்த வகையில் தற்போது இதே தோழில்நுட்பத்தின் வாயிலாக நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடனமாடும் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. செந்தில் நாயகம் என்ற கம்பியூட்டர் இன்ஜினியர் செந்தில் நாயகத்தின் டுவிட்டர் கணக்கில், சிம்ரன்,ஹன்சிகா, நயன்தாரா, மாளவிகா, கத்ரீனா கைப், கெய்ரா அத்வானி, மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் ஆடும் ரீல்ஸ் வீடியோ காணப்படுகின்றன.

இந்த வீடியோ பதிவுகளை செந்தில் நாயகம் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வரும் நிலையில், யூடியூப்பில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது காவாலா பாடல்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Samantha Ruth Prabhu Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment