ஹாஸ்பிடல் சீனில் ஃபுல் மேக்கப்புடன் இருக்கிறார் என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியதற்கு நடிகர் நயன்தாரா பதில் கூறியுள்ள விடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம்போலே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து ஒரு சில மலையாள படங்களில் நடித்த இவர், 2019-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பிறகு விஜயுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்த மாளவிகா தற்போது விக்ரமின் தங்கலான், இந்தியில் யுத்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடை சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனன், ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை மருத்துவமனையில் நோயாளியாக இருக்கும்போது கூட ஃபுல் மேக்கப்போடு இருந்தார்.
கமர்ஷியல் படம் என்றாலும் ஒரு ஞாயம் வேண்டாமா என்று கேட்டிருந்தார். மாளவிகாவின் இந்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், நடிகை நயன்தாராவைத்தான் மாளவிகா மறைமுகமாக கூறியுள்ளார் என்ற பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நயன்தாரா பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக தெலுங்கில் நடித்த ஜெய் சிம்ஹா என்ற படத்தில் ஒரு ஹாஸ்பிடல் காட்சி உள்ளது.
#Nayanthara's Reply to Malavika Mohanan..👌 pic.twitter.com/YHNxZE1NpL
— Laxmi Kanth (@iammoviebuff005) December 21, 2022
இதனிடையே சமீபத்தில் கனெக்ட் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகாக பிரபல தொகுப்பாளியி டிடியின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நயன்தாரா மாளவிகா மோகனனின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். இதில், ஒரு நடிகை எனது பெயரை குறிப்பிடாமல், எனது படத்தின் காட்சியை பார்த்து கருத்து தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் டிப்டாப்பாக மேக்கப்புடன் இருந்ததாக கூறியுள்ளார்.
அந்த சீனில் டிப்டாப்பாக இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. அதே சமயம் மருத்துவமனையில் தலைவிரி கோலமாக இருக்க முடியுமா? கமர்ஷியல் படம் என்பதால் இயக்குனரின் தேவையை பொருத்ததான் நடிக்க முடியும். எதார்த்த சினிமா நடிக்கும்போது அந்த கேரக்டராகவே மாற வேண்டியெ நிலை வரும்போது மாறிவிடுவேன் என்று கூறியுள்ளார். இவர்கள் இருவரும் பேசிய வீடியோ கிளிப்களை ரசிகர்கள் ஒன்றாக இணைத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil