Advertisment

இரவில் தூங்கும் போது... ரொம்ப பயப்படும் விஷயம் குறித்து மனம் திறந்த நயன்தாரா!

அட்லி இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜவான் படம் நயன்தாராவுக்கு பாலிவுட் சினிமாவில் முதல் படமாக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
aramm nayanthara

நடிகை நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நர்மதா ராய் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நயன்தாரா, எந்த எதிரியையும் எதிர்கொள்ளும் வலிமை பெற்றவராக நடித்துள்ளார்.

Advertisment

அட்லி இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜவான் படம் நயன்தாராவுக்கு பாலிவுட் சினிமாவில் முதல் படமாக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. நயன்தாரா தனது முதல் பாலிவுட் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஜவான் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 4 நான்கு நாட்களில் உலக அளவில் 500 கோடி வசூல் செய்துள்ளது.

ஜவான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், நயன்தாரா தனது பயம் மற்றும் கட்டுக்கதைகளைப் பற்றி பேசும் பழைய பேட்டியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கனெக்ட் படத்தின் வெளியீட்டின்போது அளித்த பேட்டியில் நயன்தாரா தனது சில பயங்களைப் பற்றி மனம் திறந்து பேசினார். அதில் நான் நிமிர்ந்து தூங்குவதில்லை.

அப்படி படுத்தால் பேய் எளிதில் அட்டாக் செய்துவிடும் என்று யாரோ சொன்ன விசித்திரமான விஷயம். அதை கேட்டு நான் பயந்துவிட்டேன். எனவே மற்றவர்கள் பக்கத்தில் தூங்குங்கள். அதேபோல, லைட் ஆஃப் செய்து விட்டு நான் தூங்குவதில்லை.  ஹாரர் படங்கள் பார்ப்பதில் பயம் இருந்தாலும் அந்த மாதிரி படங்களை அதிகம் பார்ப்பேன் எனக்கு திகில் படங்கள் பிடிக்கும். அவற்றை பார்க்கும்போது எனக்கு பயமாக இருந்தாலும் அந்த பயத்தை நான் அனுபவிக்கிறேன் என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

nayantara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment