தானும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டதாக இணையத்தில் வெளியான வதந்தியை மறுக்கும் வகையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ள நிலையில், சமீபத்தில் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்திருந்தார். அவரின் இந்த செயல் இணையத்தில் பெரும் வைரலாக பரவியது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் பிரியப்போகிறார்கள் என்று இணையத்தில் செய்திகளை வெளியிட தொடங்கிவிட்டனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘’ம்ம், நான் தொலைந்துவிட்டேன்!" என்று பதிவிட்டிருந்தது. அதேபோல் ‘’கண்களில் கண்ணீருடன் கூட, 'எனக்கு இது கிடைத்தது'’ என்று வெளியிட்டிருந்தார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவியது. நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருக்கும் இடையே ஏதேனும் பிரச்னையா என்று கேட்டு வந்தனர்.
/indian-express-tamil/media/media_files/XZwfmyH2bYtBZT3JMIlW.jpg)
இதனிடையே தற்போது தனது கணவரை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார், மேலும் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை குறிக்கிறது. மேலும் இரட்டைக் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் பெற்ற பெருமைக்குரிய இந்த ஜோடி, தங்களின் குடும்பத்தின் மீதான தங்கள் அன்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.
இதன் மூலம் நயன்தாரா தனது கணவரை பிரிந்ததாக வெளியாகியுள்ள தகவலை மறுத்துள்ள்ள நிலையில், அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“