New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Vignesh-1.jpg)
Wiki Nayan Honeymoon Photos Viral : நயன்தாரா திருமணத்தில் பிஸியாக இருந்தாலும் அவர் நடித்த ஒ2 திரைப்படம் சமீபத்தில் டிஸ்னி + ஹட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Vignesh Shivan Nayanthara Honeymoon Photos Out : தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நயன்தாரா கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.
போடாபோடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட் படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில். 8 வருடங்களாக சென்றுகொண்டிருந்த இவர்களின் காதல் பயணம் சமீபத்தில் திருமணத்தில் முடிந்து.
கடந்த ஜூன் 9-ந்தேதி விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவருக்கும் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில். திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகளாக விக்கி – நயன் ஜோடி தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். தாய்லாந்தில் கடற்கரையில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் விசன் தனது சமூவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் விக்னேஷ் சிவன் தாய்லாந்தில் எனது தாரத்துடன் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நயன்தாரா திருமணத்தில் பிஸியாக இருந்தாலும் அவர் நடித்த ஒ2 திரைப்படம் சமீபத்தில் டிஸ்னி + ஹட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தற்போது சிரஞ்சீவியுடன் காட்ஃபாதர் இந்தியின் ஷாருக்கானுடன் அட்லி இயக்கும் படம் என அடுத்தடுத்து நயன்தாரா நடிப்பில் படங்கள் வெளியாக உள்ளது..
மறுபக்கம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அடுத்து அஜித் நடிக்கும் 62-வது படத்தை இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.