தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக நயன்தாராவுக்கும் அவரின் நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில். திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து ரஜினி. விஜய் அஜித். சரத்குமார், சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் சமீப காலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்
இந்நிலையில். நானும் ரவுடிதான என்ற படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த நயன்தாரா. பாடங்களில் நடித்துக்கொண்டே தனது காதலருடன் வெளியில் செல்வது வெளிநாடு செல்வது என பிஸியாக இருந்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் இருவரும் தனி விமானத்தில் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில். இதுநாள் வரை காதலராக இருந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தற்போது கணவன் மனைவியாக மாறப்போகின்றனர் இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நாளை (ஜூன் 9) நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில். திருமணம் முடிந்த கையோடு இருவரும் வெளிநாடு ஹனிமூன் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில். கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளதால் திருமணம் முடிந்த சில நாட்களில் நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கைவசம் உள்ள படங்களை முடித்துக்கொண்டு இருவரும் இன்ப சுற்றுலா செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
தற்போது தமிழில் ஒ2 என்ற படத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. தொடர்ந்து மலையாளத்தில். கோல்ட். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்ஃபாதர், ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான், தமிழில் கனக்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் இதில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் தயாராகி வரும் ஜவான் படத்தில் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil