2015-ம் ஆண்டு தொடங்கி 6 வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் ஹாட் காதல் ஜோடியாக சுற்றித்திரிந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி பல யூகங்கள் காத்திருப்புக்குப் பிறகு இன்று (ஜூன் 9) உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் முன்னிலையில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது சமூகவலைதள பக்கததில் திருமணம் தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர் இந்த புகைப்பட்ங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த சேலை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது திருமண உடையாக பிரகாசமான சிவப்பு நிற புடவையை தேர்வு செய்த நயன்தாரா, பாரம்பரிய பட்டு சட்டை மற்றும் வேட்டியை தேர்வு செய்த விக்னேஷ் சிவன் இருவரும் இணையத்தில் தற்போது வைரல் மணமக்களாக வலம் வந்துகொண்டிருக்கினறனர். எல்லாவற்றையும் விட நயன்தாரா தனது திருமண தோற்றத்திற்கு கொடுத்த ஹைதராபாத் டச் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அழகான தென்னிந்திய மணமகள் பல அடுக்கு நெக்லஸ்கள், ஒரு மாங் டீக்கா, பெரிய காது ஸ்டட்கள் மற்றும் அவரது நகைகளைப் போன்ற வளையல்களின் அடுக்கிகளுடன் தனது தோற்றத்தை மேலும் அழகாக மாற்றியுளளார் நயன்தாரா. நாம் பேசும் 'பல அடுக்கு' நெக்லஸ் என்பது ஹைதராபாத் பாரம்பரியமான 'சட்லடா ஹார்',
இது முதலில் அரச குடும்பங்களில் அணியும் அணிகலன்களாக இருந்தது.. ஏழு சரங்கள் கொண்ட நெக்லஸ் நூற்றுக்கணக்கான முத்துக்கள் மற்றும் விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்டது. இது ஹைதராபாத்தின் நிஜாம்கள் மற்றும் நவாபி பாரம்பரியத்தில் இருந்து வந்தாலும், அது இன்றும் உன்னதமானதாகவே உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக இது மணப்பெண்களிடையே பிரபலமான தேர்வாக மாறியுள்ளது.
முத்துக்கள், படிகங்கள் மற்றும் ஒரு மரகதத் துளிகளால் அலங்கரிக்கப்பட்ட நயன்தாராவின் ஸ்டிரைக்கிங் சட்லடா மிகவும் கவர்ந்துள்ளது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் 2018 ஆம் ஆண்டு தனது மெஹந்திக்காக ஒரு அழகான சட்லடாவை தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.