scorecardresearch

லீக் ஆனது விக்கி – நயன் திருமண பத்திரிக்கை : திருமணம் எங்கே தெரியுமா?

விக்கி நயன் இருவரும் அடுத்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என்று தகவல் வெளியானது.

லீக் ஆனது விக்கி – நயன் திருமண பத்திரிக்கை : திருமணம் எங்கே தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமல்லாது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி சமந்தா ஆகியோருடன் நடித்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்தின் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் காதலனுடன் வெளியில் செல்வது வெளிநாடு சுற்றுலா செல்வது என ஜாலியாக சுற்றி திரிந்து வந்தார். இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தி் வைரலாக பரவியது.

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்கி நயன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இருவரும் அடுத்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில்,  தற்போது அவர்கள் திருமண பத்திரிகை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த பத்திரிக்கயைில் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் தான் திருமணம் நடக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் விக்கி நயன் திருமணம் எங்கு நடக்கிறது என்ற கேள்விக்கு விடை் கிடைத்துள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் நடக்க இருக்கும் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gallery

திருமண பத்திரிகை தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது. திருமணத்திற்கு முன்பு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு கோவில்களில் விக்கி – நயன் இருவரும் பூஜைகள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress nayanthara wikki marriage invitation viral

Best of Express