/indian-express-tamil/media/media_files/szedaQ871EeHEfwa58oU.jpg)
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் சமூகவலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நயன்தாராவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹெக் செய்யப்பட்டுள்ளத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இருந்த நிலையில், தற்போது தமிழில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேபோல் அவரது கணவர், விக்னேஷ் சிவன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இருவரும் திரையுலகில் பிஸியாக நட்சத்திரங்களாக வலம் வரும் நிலையில், தனியாக பிஸினசும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நயன்தாரா இந்தியாவில், அழகுசாதன பொருட்கள் முதல் சானிட்டரி நாப்கின்கள் வரை பெண்களுக்கு தேவையான பல பொருட்களை விற்பனை செய்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நயன்தாரா, தான் விற்பனை செய்து வரும் பொருட்கள் தொடர்பான விளம்பர படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 20 வருடங்களாக திரைத்துறையில் இருந்தாலும் சமீபத்தில் தான் நயன்தாரா சமூகவலைதளங்களில் அக்கவுண்ட் தொடங்கினார்.
Account has been hacked. Please ignore any unnecessary or strange tweets being posted.
— Nayanthara✨ (@NayantharaU) September 13, 2024
இந்நிலையில், தற்போது நயன்தாராவின் எக்ஸ் தள கணக்குகள் க்ரிப்டோ விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் 2 பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதன்பிறகு இந்த பதிவுகளை நீக்கிய நயன்தாரா, அவரின் எக்ஸ் கணக்கு மீண்டும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. புதிதாக எதாவது பதிவுகள் வந்திருந்தால் அதனை பொருட்படுத்த வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.