கொலை வழக்கை துப்பறியும் நாயகி; தமிழில் நஸ்ரியா மாஸ் ரீ-என்டரி: ஓ.டி.டி ரிலீஸ் எப்போ தெரியுமா?

கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகிய நிலையில், 4 வருட இடைவெளிக்கு பிறகு 2018-ம்ஆண்டு வெளியான கோடி என்ற படத்தின் மூலம் ரீஎன்டரி ஆனார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகிய நிலையில், 4 வருட இடைவெளிக்கு பிறகு 2018-ம்ஆண்டு வெளியான கோடி என்ற படத்தின் மூலம் ரீஎன்டரி ஆனார்.

author-image
WebDesk
New Update
Nazh

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களே நடித்திருந்தாலும், தனது துறு துறு நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை நஸ்ரியா, திருமணத்திற்கு பிறகு, நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது ஒரு வெப் தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில், அந்த சீரியஸின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

2006-ம் ஆண்டு பலுன்க் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா, நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாய் மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகிய நிலையில், 4 வருட இடைவெளிக்கு பிறகு 2018-ம்ஆண்டு வெளியான கோடி என்ற படத்தின் மூலம் ரீஎன்டரி ஆனார்.

மலையாளம் மற்றும் தெலுங்கில் ரீ-என்ட்ரி ஆன நஸ்ரியா, தமிழில் ஒரு வெப் தொடரின் மூலம் ரீ-என்டரி கொடுக்கிறார், பிரிட்டிஷ் இந்தியாவில் நடக்கும் பீரியட் க்ரைம் த்ரில்லர் படமான 'தி மெட்ராஸ் மிஸ்டரி – ஃபால் ஆஃப் எ சூப்பர்ஸ்டார்' மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் திரும்புகிறார். இந்தத் திரைப்படம் நவம்பர் 6, 2025 அன்று சோனி லைவ் (SonyLIV) ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தியாவின் பழமையான தீர்க்கப்படாத குற்றங்களில் ஒன்றை அடிப்படையாக வைத்து புதிய கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

1940-களில், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நிலவிய அரசியல் பதற்றம், பல ரகசியங்களை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் இன்னும் வெளியாகாத நிலையில், வெளியான விளம்பரப் படங்கள் ஒரு அழுத்தமான, மர்மமான க்ரைம் டிராமா பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் படத்தின் கதை, அதன் காலகட்டத்தில் மிகவும் பரபரப்பான குற்றங்களில் ஒன்றான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Advertisment
Advertisements

லட்சுமிகாந்தன், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களைப் பற்றிய கிசுகிக்களை வெளியிட்ட ஒரு பத்திரிகையாளர். மெட்ராஸ் தெருக்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அவர் திடீரென இறந்தபோது, அது ஒரு பரபரப்பான வழக்கிற்கும், பெரும் பொது கொந்தளிப்புக்கும் வழிவகுத்தது. பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே இருந்தது. படத்தின் கதை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், 'தி மெட்ராஸ் மிஸ்டரி' இந்த நிஜ வாழ்க்கைக் நிகழ்வை ஆராய்ந்து, காலனித்துவ ஆட்சியின் போது புகழ், ஊடகம், மற்றும் அதிகாரம் ஆகியவற்றிற்கு இடையேயான ஆபத்தான உறவை வெளிச்சம் போட்டுக் காட்டும் எனத் தெரிகிறது.

நட்டி, சாந்தனு பாக்யராஜ், நாசர் மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். இப்படி ஒரு வலுவான நடிகர்கள் பட்டாளத்துடன், இந்தப் படம் சினிமா அழகியலையும், அழுத்தமான கதை சொல்லலையும் இணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Nazriya Nazim

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: