சின்னத்திரை நடிகை நீலிமா ராணியின் முதல் கணவர் யார் என்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தேடி வந்த நிலையில், இது குறித்து அவதே விளக்கம் அளித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளவர் நீலிமா ராணி. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, ராஜாதி ராஜா, மொழி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையே நீலிமாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது என்று சொல்லலாம். மெட்டி ஒலி, கோலங்கள், அரண்மனை கிளி, வாணி ராணி என சின்னத்திரையில் 50-க்கு மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள நீலிமா ராணி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார். வெள்ளித்திரை சின்னத்திரை மட்டுமல்லாமல் தொகுப்பாளியாகவும் தன்னை நிரூபித்துள்ளார் நீலிமா.
இந்நிலையில், நீலிமா கடந்த 2008-ம் ஆண்டு தன்னை விட 11 வயது மூத்தவராக இசைவாணன் என்பரை திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் குறித்து நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நீலிமா தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில சமயங்களில் ட்ரோல்களுக்கு ஸ்ராங்காக பதிலடி கொடுக்கவும் தயங்குவதில்லை.
இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நீலிமாவிடம் அவரைப்பற்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விகளுக்கு அவரும் பதில் அளித்து வந்த நிலையில், இதில் அவரது கணவருக்கும் அவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் குறித்து கேட்டபோது 11 வயது வித்தியாசம் என பதில் அளித்த அவரிடம், உங்களது முதல் கணவர் யார் என்றும் அதிகளவில் தேடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த நீலிமா ராணி எனக்கு தெரிஞ்ச ஒரே கணவன் இசைவானன் தான். நல்லா தேடிருக்கீங்க. என்னுடைய முதல் கணவனும் இசைவானன் தான், இரண்டாவது கணவனும் இசைவானன் தான் என கூலாக பதில் அளித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil