/indian-express-tamil/media/media_files/2024/10/16/7jdX4Zn8JoVXu4ywtk8q.jpg)
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை நிரோஷாவை அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர், ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்ற வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் நடிகை நிரோஷா. பிரபல நடிகை ராதிகாவின் சகோதரி, நடிகர் ராம்கி மனைவியுமான இவர், 1988 ஆம் ஆண்டு 'அக்னி நட்சத்திரம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சூர சம்ஹாரம், செந்தூரபூவே, பட்டிக்காட்டு தம்பி, பாண்டிய நாட்டு தங்கம் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தன்னுடன் நடித்த பிரபல நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிரோஷா, திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில், தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக இவரது நடிப்பில், 2000 முதல் 2004 வரை வெளியான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' என்ற நகைச்சுவைத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் தாமரை, மின்னலே, சந்திரகுமாரி போன்ற சீரியல்களிலும் நடித்த நிரோஷா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், நிரோஷாவின் மகனாக நடிக்கும் நடிகர் வி.ஜே.கதிர்வேல் கந்தசாமி நிரோஷாவை தன் கைகளில் தூக்கிக்கொண்டு வந்து, நாற்காலியில் உட்கார வைக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்ட நிரோஷா, "வாழ்க்கை எவ்வளவு தூரம் சென்றாலும், ஒரு மகன் எப்போதும் தன் தாயின் அன்பை இதயத்தில் சுமந்து கொண்டிருப்பான்" என்று பதிவிட்டுள்ளார். இந்த உணர்ச்சிகரமான வீடியோ வைரலாக வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.