சினிமாவில் கவர்ச்சி என்பது இப்போது சர்வ சாதாரணமாக மாறியிருந்தாலும் 80-90 களில் இந்த கவர்ச்சி அத்தி பூர்த்தார்போல் ஏதாவது ஒரு படத்தில் வந்திருக்கும். அதே சமயம் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைளின் உண்மை முகம் அவர்களை கவர்ச்சியாக பார்க்கும் பார்வையில் இருந்து பெரிய வித்தியாசமாக இருக்கும்.
தற்போதைய காலக்கடத்தில் பல நடிகைகளில் கவர்ச்சிக்கு மாறி வருகின்றனர். இதன் மூலம் சிலர் வெற்றியை பெற்றாலும் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாமலே தங்களது திரையுலக பயணத்தை முடித்துக்கொள்கின்றனர். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை நிஷா நூர்.
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இவர், 1980-ல் வெளியான மங்கள நாயகி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து இளமை கோலம், எனக்காக காத்திரு, டிக் டிக் டிக், அவள் சுமங்கலி தான், ஸ்ரீ ராகவேந்திரா, கல்யாண அகதிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில், 1992-ம் ஆண்டு வெளியான அவள் ஒரு வசந்தம் படத்தில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள நிஷா நூர் கவர்ச்சியான மற்றும் தைரியமான கேரக்டர்களில் நடித்து பெயர் பெற்றவர். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர். நிஷா நூர் திரை வாழ்க்கையில், உச்சத்தில் இருந்தபோது பாலச்சந்திரன், விசு மற்றும் சந்திரசேகர் போன்ற புகழ்பெற்ற இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு நிஷா நூரின் திரை வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்றன, மேலும் அவர் பட வாய்ப்பு பெறுவதில் நிறைய போராட்டங்களை எதிர்கொள்ளத் தொடங்கினார். மேலும் நிஷா நூர் திரைப்பட வாய்ப்பு இல்லததால், ஒரு தயாரிப்பாளர் அவரை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், அது பிடிக்காமல், நிஷா படங்களில் இருந்து விலக முடிவு செய்ததாகவும் தகவல்கள் உள்ளது. ஆனால் நிஷா நூர் நீண்ட காலமாக திரைத்துறையில் யாருடனும் தொடர்பில்லாததால் இந்த வதந்திகளை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
மேலும் பலரை நம்பி நிஷா நூர் தனது உழைத்து சம்பாதித்த பணத்தை இழந்தார் மற்றும் கடினமான கட்டத்தில் அவரது குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடமிருந்து அவருக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு தர்காவிற்கு வெளியே தெருவில் தூங்கிக் கொண்டிருந்த நிஷா நூர்வை தமிழ் அரசு சாரா முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மீட்டது.
அப்போது அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். பின்னர் நிஷா நூர் கடினமாக நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்த நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு மருத்துவமனையில் நிஷா நூர் மரணமடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.