Tamil cinema Update : 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பானுபிரியா. தமிழி்ல் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான மெல்ல பேசுங்கள் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து ரஜினி, கமல்,விஜயகாந்த, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது அம்மா அக்கா வேடத்திற்கு மாறியுள்ள பானுபிரியா கடைசியாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார். தற்போது சிவார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
Advertisment
பானுபிரியாவிற்கு சாந்திபிரியா என்ற தங்கை ஒருவர் உள்ளார். கடந்த 1987ம் ஆண்டு கங்கை அமரன் ராமராஜன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிஷாந்தினி என்றும் சாந்திபிரியா, தனது முதல் படத்திலேயே தமிழக மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். அதன்பிறகு தனது அக்காவை போல பல முன்னணி நடிகர்ளுடன் இணைந்து நடித்த நிஷாந்தினி கடைசியாக தமிழில் உயர்நதவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் கடந்த 1992-ம் ஆண்டு வெளியானது அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்காத அவர், ஒரு சில ஹி்ந்தி படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து சின்னத்திரை பக்கம திரும்பிய அவர். விஸ்வமித்தா ஆர்யமான் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தார். கடந்த 2012-ம் ஆண்டுக்கு பிறகு சினிமா மற்றும் சின்னத்தரையில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிஷாந்தினி தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தற்போது ஜீ ஸ்டூடியோ நிறுவனம் எம்எக்எஸ் ப்ளேயர்-க்காக ஒரு வெப் தொடரை தயாரிக்க உள்ளது. முன்னணி நாயகர்கள் பலர் இணைந்து நடிக்கும் இந்த தொடரில் நிஷாந்தினி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தி மற்றும் தமிழில் தயாராகும் இந்த வெப் தொடர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் இந்தியில் தயாராகும் தாராவி பேங்க் என்ற வெப்தொடரிலும் நிஷாந்தினி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப் தொடரில், பாலிவுட் முன்னணி நட்சத்திரம் சுனில் ஷெட்டி, மற்றும் விவேக் ஓபராய் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த தொடரின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் பல வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் நிஷாந்தினியை திரையில் காண அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil