திருமணத்திற்கு ரெடியான நிவேதா தாமஸ்? எக்ஸ் தளத்தில் வெளியான முக்கிய பதிவு; ஒருவேளை இருக்குமோ?

தமிழில் நாயகியாக சரியான வாய்ப்பு இல்லாத நிவேதா தாமஸ் தெலுங்கில் நாயகியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நாயகியாக சரியான வாய்ப்பு இல்லாத நிவேதா தாமஸ் தெலுங்கில் நாயகியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Nivetha Thamas
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் நடிகை நிவேதா தாமஸ் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Advertisment

மலையாளத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான வருதே ஒரு பாரியா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ். தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து போராளி படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நிவேதா தாமஸின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. அடுத்து விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் மீண்டும் அவருக்கு தங்கையாக நடித்தார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் மகளாக நடித்து அசத்தினார்.

தமிழில் நாயகியாக சரியான வாய்ப்பு இல்லாத நிவேதா தாமஸ் தெலுங்கில் நாயகியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நானிக்கு ஜோடியாக இவர் நடித்த ஜென்டில்மேன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் வெளியான சாஹினி, தாஹினி என்ற படத்தில் லீடு ரோலில் நடித்திருந்த நிவேதா மலையாள படமான எந்தாடா சாஜி என்ற படத்தில் நடித்திருந்தார்.

Advertisment
Advertisements

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நிவேதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், கொஞ்ச நேரம் ஆனாலும் இறுதியாக முடிந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நிவேதா தாமஸ்க்கு திருமணம் ஆக போகிறதா என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

nivetha thomas

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: