Advertisment
Presenting Partner
Desktop GIF

நக்மா முதல் ஷோபனா வரை... திருமணத்தை வெறுத்த 'ஏஞ்சல்' நடிகைகள்

திரைத்துறையில் சில நடிகைகள் காலம் கடந்த பின்னும் இன்னும் திருமணம் என்ற பந்தத்தில் இருந்து விலகியே உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nagma Shobana Mumtajm tabu

மும்தாஜ் - நக்மா - ஷோபனா - தபு

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தமிழ் சினிமா நடிகைகளுக்கு கச்சிதமாக பொருந்தும். திருமணமாகிவிட்டால் நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லை என்ற நிலைமை இன்று தமிழ் சினிமாவில் உள்ள வழக்கம். இதில் ஒரு சில நடிகைகள் விதிவிலக்காக இருந்தாலும் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தங்கள் முன்னிலை இடத்தை இழந்த பிறதே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

Advertisment

நடிகர்கள் பெரும்பாலும் தங்களது திருமண வயதில் திருமணம் செய்துகொண்டு அதன்பிறகு நடிகளுடன் டூயட் பாடுவார்கள். ஆனால் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகைககள் அப்போது திருமணம் செய்துகொண்டால் தங்களது மார்கெட் சரிந்துவிடும் என்ற பயத்தில் திருமணம் பற்றி யோசிப்பதில்லை. இப்படி காலம் கடந்து திருமணம் செய்துகொண்ட பல நடிகைகள் இருக்கிறார்கள்.

அதே சமயம் மார்கெட் நிலவரத்தை பற்றி யோசித்து திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த சில நடிகைகள் காலம் கடந்த பின்னும் இன்னும் திருமணம் என்ற பந்தத்தில் இருந்து விலகியே உள்ளனர். இதில் சில நடிகைகள் தங்களுக்கு திருமணம் செட் ஆகாது என்று கூறி வரும் நிலையில், சிலர் தங்களுக்கு ஏற்ற மாப்பிள்ளை அமையவில்லை என்று சொல்வார். அந்த வகையில் காலம் கடந்து திருமணம் செய்துகொள்ளாத டாப் நடிகைள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மும்தாஜ்

மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மும்தாஜ். டி.ராஜேந்தர் இயக்கிய இந்த படமே மும்தாஜ் தனி நாயகியாக நடித்த படம் என்று சொல்லலாம். அதன்பிறகு பல படங்களில் முக்கிய கேரக்டர் ஒரு பாடலுக்கு நடனம் என்று நடித்து வந்த மும்தாஜ், இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கடைசியான தமிழில் வீராசாமி என்ற படத்தில் டி.ராஜேந்தர். அதன்பிறகு ராஜாதி ராஜ படத்தில் வில்லியாக நடித்த மும்தாஜ்க்கு அதுவே தமிழில் கடைசி படமாக இதுவரை உள்ளது. தற்போது 42 வயதை கடந்துள்ள மும்தாஜ் இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வி காரணமாக திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது தெலுங்கு படங்களில் மும்தாஜ் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

தபு

காதல் தேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தபுவை யாராலும் மற்ற முடியாது. அந்த அளவிற்கு காதல் தேசம் படம் இளைஞர்களின் ஃபேவரெட் படமாக அமைந்தது. அதன்பிறகு இருவர், தாயின் மணிக்கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த தபு அஜித் ஜோடியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடைசியாக டேவிட் என்ற இந்தி – தமிழ் பைலிங்குல் படத்தின் மூலம் தமிழில் நடித்த தபு தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 52 வயதாகும் தபு தற்போதுவரை திருமணம் செய்துகொளள்வில்லை. இந்திய நடிகர் ஒருவருடன் காதலில் இருந்த தபு அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கௌசல்யா

ஏப்ரல் 19 என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான கெளசல்யா காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து நேருக்கு நேர் பிரியமுடன், சொல்லாமலே, வானத்தைபோல, என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள் கௌசல்யாவுக்கு தற்போது 43 வயதாகும் நிலையில், இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தற்போது அவர் ஆன்மீகத்தில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஷோபனா

பரதநாட்டிய கலைஞர் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் ஷோபனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபனா கமல்ஹாசனின் எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் நாயகியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து இது நம்ம ஆளு, சிவா, என்கிட்ட மோதாதே, தளபதி, துறைமுகம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக துறைமுகம் படத்தில் நடித்த ஷோபனா 16 வருடங்களுக்கு பிறகு சிம்புவின் போடா போடி படத்தில் ரீ-என்டரி ஆனார். பரதநாட்டியத்திற்கு தன்னை அர்ப்பணித்துவிட்டதால் 53 வயதாகியும் ஷோபனா தற்போதுவரை திருணம் செய்துகொள்ளவில்லை. ஆனாலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

நக்மா

இந்தி சினிமாவில் அறிமுகமாகி 1994-ம் ஆண்டு தமிழில் வெளியான காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிகமானவர் நக்மா. முதல் படமே பெரும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், 2-வது படமாக ரஜினியுடன் பாட்ஷா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தற்போதுவரை தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நக்மா கடைசியாக அஜித்தின் சிட்டிசன் படத்தில் நடித்திருந்தார். இவர் முன்னணி நடிகையாக இருந்த காலக்கட்டத்தில் பல காதல் கிசுக்கிசுக்களை சந்தித்துள்ளார். ஆனால் தற்போது 48 வயதாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனது தங்கை ஜோதிகாவின் குழந்தைகளை கவனித்து வருகிறார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment