தமிழ் சினிமாவில் நடனத்திலும் நடிப்பிலும் தனி அடையாளத்தை பதித்துள்ள நடிகை பத்மினி, 4 மாத கர்ப்பினியாக இருந்தபோது, படப்பிடிப்புக்காக குதிரை ஏற்றம் காட்சியில் நடித்துள்ளதாக பிரபல நடன கலைஞர் ஷோபனா ரமேஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நாட்டிய பேரொளி என்ற அடையாளத்துடன் திகழ்ந்தவர் நடிகை பத்மினி. 1947-ம் ஆண்டு வெளியான கன்னிகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பத்மினி, தொடர்ந்து முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து சுமார் 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதன் காரணமாக க்ளாசிக் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு ராசியாக ஜோடியாக சிவாஜி பத்மினி இருவரும் வலம் வந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி, மலையாளம், சிங்களம், ப்ரஞ்ச், உள்ளிட்ட மொழிப்படங்கில் நடித்துள்ள பத்மினி ரஷ்யமொழி படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பிலும் நாட்டியத்திலும் தனக்கென தனி அடையாளத்துடன் திகழ்ந்த பத்மினி 4 மாத கர்ப்பினியாக இருந்தபோது படப்பிடிப்பில் குதிரையேற்ற காட்சியில் நடித்துள்ளார். 1961-ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்ட பத்மினி, 1963-ம் ஆண்டு பிரேமானந்த் என்ற குழந்தையை பெற்றெடுத்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில், எம்.ஜி.ஆருடன் ராணி சம்யுக்தா, விக்ரமாதித்யன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இதில் 1962-ம் ஆண்டு வெளியான படம் ராணி சம்யுக்தா. இந்த படத்தில் சம்யுக்தா ராணியாக நடித்திருந்த பத்மினி, திருமணமான புதிதில் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது பத்மினி கர்ப்பினியாக இருந்ததாகவும், அப்போது தான் குதிரையேற்ற காட்சியில் நடித்ததாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“