தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் 5 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், தனது சினிமா வாழ்க்கையில் பல நாயகிகளுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் இவருடன் நடித்த நாயகி ஒருவர் மனைவி, அண்ணி மற்றும் அம்மா, 3 கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.
நடக நடிகராக இருந்து சினிமாவிற்கு வந்த நடிகர்களில் முக்கியமானவர் சிவாஜி கணேசன். தனது நடிப்பின் மூலம் தற்போதைய நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் இவர், 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் பேசிய வசனங்கள், ஒரு அறிமுக நடிகரை போல் இல்லாமல், கைதேர்ந்த நடிகர் என்று ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு நடிப்பில் முதிர்ச்சியை கட்டியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்த சிவராஜி கணேசன், ஒவ்வொரு படத்திற்கு வித்தியாசத்தையும் காட்டியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன், சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி என க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்த பலருடன் ஜோடியாக நடித்துள்ள நிலையில், 80-களில் முன்னணி நடிகைகளாக இருந்த ராதா அம்பிகாவுடனும் இணைந்து நடித்துள்ளார்.
இதில் சிவாஜிக்கு முன்பே சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் நடிகை பத்மினி. 1947-ம் ஆண்டு வெளியான கன்னிகா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பத்மினி, தொடர்ந்து மோகினி, வேதாள உலகம், பக்த ஜனா, மந்திரி குமாரி உள்ளிட்ட பல படங்களில் டான்சராக நடனமாடியிருந்தார். அதன்பிறகு 1952-ம் ஆண்டு வெளியான பணம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் தான் சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம்.
/indian-express-tamil/media/media_files/OCP4id7V9BUPwhiEQnHX.jpg)
என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய இந்த படத்தை கண்ணதாசன் தயாரித்திருந்தார். ஆனால் பராசக்தி படம் முதலில் வெளியானதால் சிவாஜியின் முதல் படம் பராசக்தி என்று ஆனது. பணம் படத்தை தொடர்ந்து சிவாஜி – பத்மினி ஜோடி, அன்பு, தூக்கு தூக்கி, இல்லற ஜோதி, எதிர்பாராதது, மங்கையர் திலகம், உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சிவாஜியுடன் 60 படங்களில் இணைந்து நடித்துள்ளதாக பத்மினி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சிவாஜிக்கு மனைவி, அண்ணி, மற்றும் அம்மா என 3 வகை கேரக்டரிலும் நடித்துள்ளவர் நடிகை பத்மினி.
1954-ல் வெளியான எதிர்பாராதது படத்தில் சிவாஜியின் காதலியாக வரும் வரும் பத்மினி, பின்னாளில் அவருக்கு அம்மா என்று ஆகிவிடுவார். பத்மினியை காதலிக்கும் சிவாஜி, படிப்புக்காக வெளிநாடு என்ற போது, விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படும். அதன்பிறகு வேறு வழி இல்லாமல் பத்மினி சிவாஜியின் அ்பபாவை திருமணம் செய்துகொள்வார். அதனால் காதலியாக இருந்த பத்மினி சிவாஜிக்கு அம்மாவாக மாறிவிடுவார்.
அதன்பிறகு 1955-ம் ஆண்டு வெளியான மங்கையர் திலகம் படத்தில் சிவாஜிக்கு அண்ணியாவும் நடித்துள்ளார் பத்மினி. இப்படி நடித்தும் பல படங்களில் இருவரும் காதலர்களாக நடித்திருக்கிறோம். அதேபோல் 1959-ம் ஆண்டு வெளியான தங்க பதுமை என்ற ஒரு படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். படப்பிடிப்பின்போது ஒருநாள் இயக்குனருக்கு உடல் நிலை சரியில்லை. அப்போது எனக்கும் கால்ஷீட் பிரச்சனை. அதனால் ஷூட்டிங்கை கேன்சல் செய்ய முடியாது.
அப்போது ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டி இருந்ததால் அந்த பாடலை சிவாஜி நடிக்க நானே இயக்கினேன். அப்போது சிவாஜி நான் இப்போ நடிகர் நீதான் இயக்குனர் டைரக்டர் மேடம் என்ன பண்ணணும் என்று கேட்டார். அப்போது அவருக்கு எப்படி பண்ண வேண்டும் என்று நான் சொன்னேன் என்று நடிகை பத்மினி ஒரு பத்திரிக்கை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“