Tamil Serial Update : தற்போதைய காலகட்டத்தில் தொலைக்காட்சி சீரியல்கள் திரைப்படங்களை விட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. சிறிது நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை விட அடுத்த எபிசோட்டில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பே சீரியல்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லிவிடலாம். தொடக்கத்தில் வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகள் பலரும் சினிமா வாய்ப்பு குறைந்து டிவி சீரியல் பக்கம் திரும்பிய நடிகைகளே அதிகம்.
இதில் ஒரு சில நடிகைகள் ஓரிரு சீரியலுடன் நிறுத்திக்கொண்ட நிலையில், வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ராதிகா. இவரது நடிப்பில் வெளியான சித்தி, செல்லமே, வாணி ராணி, அண்ணாமலை, உள்ளிட்ட சீரியல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த சீரியல்கள் அனைத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தவர் நடிகை பசி சத்யா. 70-80 களில் முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற இவர், 1979-ம் வெளியான பசி என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த்தன் மூலம் பசி சத்யா என அறியப்பட்டார்.
குணச்சித்திர வேடங்களில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற இவது, 1999-ம் ஆண்டு சித்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார். தொடர்ந்து செல்லமே, அண்ணாமலை, இளவரசி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். அதன்பிறகு சீரியலை விட்டு ஒதுங்கியிருந்து பசி சத்யா அந்த இடைவெளியில் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு வெளியாக மாரி 2 படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், பசி சத்யா தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் நடிகை பசி சத்யா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே இருக்கும் கேரக்டருக்கு மாற்றாக வருகிறாரா அல்லது புதிய கேரக்டரில் நடிக்க உள்ளாரா என்பது வெளாகாத நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து நடிகை பசி சத்யா சீரியலில் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூவே உனக்காக சீரியல். இதில் பூவரசி கேரக்டரில் நாயகியாக நடிகை ராதிகா ப்ரீத்திநடித்து வரும் நிலையில், . கதிர் என்ற கேரக்டரில் நாயகனாக பிரபல சீரியல் நடிகர் முகமது அசீம். நடித்து வருகிறார். தொடக்கத்தில் சாதாரணமாக சென்ற தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil