கடந்த 2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காத இவர் தெலுங்கில் கவனம் செலுத்தினார்.

2014-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க லைலா கோசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பூஜா, தொடர்ந்து, முகுந்தா சாக்ஷியம், மகரிஷி, ஆலா வைகுந்தபுரம்லோ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பூஜா ஹெக்டே கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி ஆனார்.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த படம் பல எதிர்மறையாக விமர்சனங்களை பெற்றது. தற்போது மீண்டும் தெலுங்கில் கவனம் செலுத்தும் பூஜா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெள்ளை நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”