துணிவு படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கன் தனது மனைவி பூஜா ராமச்சந்திரனுடன் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜான் கொக்கன். அதற்கு முன்பு அஜித்தின் வீரம், கே.ஜி.எப் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது சார்பட்டா பரம்பரை படம்தான். குத்துச்சண்டை வீரராக நடித்த இவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தின் ஜான் கொக்கன் தான் முக்கிய வில்லன் ரோலில் நடித்திருந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலை வாரி குவித்து வருகிறது.
எஸ்.எஸ்.மியூசிக் விஜே பூஜா ராமச்சந்திரன் தான் ஜான் கொக்கனின் மனைவி. பீட்சா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜான் கொக்கனை திருமணம் செய்துகொண்டார். திருமணமானது முதல் தம்பதி இருவரும் அவ்வப்போது ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக உள்ளார். இது தொடர்பான சமீபத்தில் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை இருவரும் பகிர்ந்துகொண்ட நிலையில், தற்போது தம்பதி கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன், பிகினி உடையில் கடற்கரையில் கணவருடன் எடுத்தக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற பிகினி உடையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/