ராணி என்றென்றும் ராணி தான்... அரண்மனை பட நடிகையின் பிகினி க்ளிக்ஸ்
தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ள பூனம் பாஜ்வா, சுந்தர்.சியுடன் அரண்மனை மற்றும் முத்துனகத்தரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான மூடட்டி சினிமா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. தொடர்ந்து பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
Advertisment
ஹரி இயக்கிய இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் நாயகி, பூனம் பாஜ்வாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த வகையில், ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ஸ்ரீகாந்துடன் துரோகி, நரேனுடன் தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் தெனாவட்சு கச்சேரி ஆரம்பம் என இரண்டு படங்களும் வெற்றியை கொடுத்தது.
தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ள பூனம் பாஜ்வா, சுந்தர்.சியுடன் அரண்மனை மற்றும் முத்துன கத்தரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்த இரு படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்தாலும், தமிழில் வாய்ப்பில்லாத பூனம், மலையாளத்தில் மம்முட்டியுடன் மாஸ்டர் பீஸ், தெலுங்கில் என்.டி.ஆர் கதாநாயகடு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
2019ம் ஆண்டு குப்பத்து ராஜா என்ற படத்தின் மூலம் ரீ-என்டரி ஆன பூனம் பாஜ்வா, கடந்த ஆண்டு நட்டி ராம்கி நடிப்பில் வெளியான குருமூர்த்தி என்ற படத்தில் நடித்திருந்தார்.
சமூகவலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் பூனம் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது பூனம் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil