Advertisment
Presenting Partner
Desktop GIF

வித்தியாசம் காட்டும் சித்தி 2 நடிகை... பழைய பாடலுக்கு குரல் கொடுத்த வைரல் வீடியோ

Tamil Serial Update : பொதுவாக சீரியல் நடிகைககள் பலரும் ஆங்கிலப்பாடல, அல்லது இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள பாடல்களைத்தான் அதிகம் பாடி வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நகைகளை விட உங்கள் புன்னகை மிளிர்கிறது : சித்தி 2 நாயகியின் வைரல் போட்டோஸ்

Actress Preethi Sharma Singing Old Song : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு கதை பாடட்டுமா சார் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ப்ரீத்தி சர்மா. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் தொடர்ந்து திருமணம், சீரியலில் முக்கிய கேரக்ரில் நடித்தார். அதன்பிறகு இவருக்கு சித்தி 2 சீரியலில் முதன்மை கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisment

தற்போது சித்தி 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ப்ரீத்தி சர்மா, ஹிந்தியில் தேவி ஆதிபராசக்தி காவியஞ்சலி என்ற தொடரின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார். மேலும் சன்டிவியின், பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள் வானத்தைப்போல உள்ளிட்ட சீரியல்களில் கெஸட் ரோலில் நடித்துள்ளார்.

சித்தி 2 சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலகியதை தொடர்ந்து அந்த சீரியலின் அடையாளமாக மாறியுள்ள ப்ரீத்தி சர்மா தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்து வரும் அவர், சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை ளெியிட்டு வரும் ப்ரீத்தி, சில சமயங்களில் பாடல் பாடுவது நடனம் உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக சீரியல் நடிகைககள் பலரும் ஆங்கிலப்பாடல, அல்லது இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள பாடல்களைத்தான் அதிகம் பாடி வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் ப்ரீத்தி சர்மா கொஞ்சம் வித்தியாசமாக பழைய ஹிட் பாடலாக “ஊரு சனம் தூங்கிடுச்சி’’ என்ற பாடலை தனது சொந்த குரலில் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரராக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இவரது குரல் இந்த பாடருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் மாடர்ன் உடை இல்லாமல் பாரம்பரிய உடையான சேலையில், தோன்றியுள்ள ப்ரீத்தி சர்மாவின் இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Preethi Sharma Chithi 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment