scorecardresearch

நித்திகிட்ட என்னவோ இருக்கு… திருமணம் செய்ய ஆசைப்படும் முன்னணி தமிழ் நடிகை!

ப்ரியா ஆனந்த் தற்போது தமிழில் பிரஷாந்துடன் அந்தகன், மிர்ச்சி சிவாவுடன் சுமோ, காசேதான் கடவுளடா, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நித்திகிட்ட என்னவோ இருக்கு… திருமணம் செய்ய ஆசைப்படும் முன்னணி தமிழ் நடிகை!

நித்தியாநந்தாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தமிழ் நடிகை ஒருவர் கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவரை திருமணம் செய்துகொண்டார் தனது பெயரைக்கூட மாற்ற தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து புகைப்படம், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, வை ராஜா வை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் பிரஷாந்துடன் அந்தகன், மிர்ச்சி சிவாவுடன் சுமோ, காசேதான் கடவுளடா, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ப்ரியா ஆனந்த் நடித்து வருகிறார். மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படாக ஜேம்ஸ் படத்தில் ப்ரியா ஆனந்த் தான் நாயகி.

இந்நிலையில், சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ப்ரியா ஆனந்த் நித்தியானந்தா மீது தனக்கு கிரஷ் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அவரை திருமணம் செய்தால் தனது பெயரான ப்ரியா ஆனந்த் என்பதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இவரின் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

இந்தியாவில் பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் நித்யானந்தா தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவர் ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாச நாடு என்று பெரிட்டு அங்கு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது வீடியோ மூலம் வெளியுலகிற்கு காட்சி அளிக்கும் நித்தியானந்தா எந்த நேரத்திலும் இந்திய அரசால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress priya anand wants to marry nithyananda