காஸ்ட்யூம் சூப்பர்...ஸ்டைலான தமிழச்சி... பிரியா பவானி சங்கர் வைரல் க்ளிக்ஸ்

ராகவா லாரன்சின் ருத்ரன் படத்தில் நடித்திருந்த பிரியா பவானி சங்கர், தற்போது டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

ராகவா லாரன்சின் ருத்ரன் படத்தில் நடித்திருந்த பிரியா பவானி சங்கர், தற்போது டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priya Bhavani shankar

நடிகை பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் பிளாக் ட்ரெஸில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வந்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் பிரியா பவானி சங்கர். இவர் 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

publive-image
Advertisment
Advertisements

தொடர்ந்து, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், அருண்விஜயுடன் இவர் நடித்த மாஃபியா, யானை உள்ளிட்ட படங்கள் இவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.

publive-image

சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் அகிலன், சிம்புவின் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் அதேபோல் தனுஷூன் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் கடந்த ஆண்டில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

publive-image

சமீபத்தில் வெளியான ராகவா லாரன்சின் ருத்ரன் படத்தில் நடித்திருந்த பிரியா பவானி சங்கர், தற்போது டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் கமல் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியன் 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image
publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு ரசிகர் ஒருவர் எனக்கு மட்டும் தான் இவங்கள பார்த்தா த்ரிஷா மாதிரி தெரியுதா என்று கமெண்ட் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Priya Bhavani Shankar Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: