scorecardresearch

இவங்கள பாத்தா அவங்கள மாதிரியே தெரியுதே… பிரியா பவானி சங்கர் க்ளிக்ஸ்

சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் அகிலன், சிம்புவின் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்

Priya Bhavani shankar
பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வந்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் பிரியா பவானி சங்கர். இவர் 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அருண்விஜயுடன் இவர் நடித்த மாஃபியா, யானை உள்ளிட்ட படங்கள் இவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.

சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் அகிலன், சிம்புவின் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்

அதேபோல் தனுஷூன் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் கடந்த ஆண்டில் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

கடந்த வாரம் வெளியான ராகவா லாரன்சின் ருத்ரன் படத்தில் நடித்திருந்த பிரியா பவானி சங்கர், தற்போது டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல் கமல் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு ரசிகர் ஒருவர் எனக்கு மட்டும் தான் இவங்கள பார்த்தா த்ரிஷா மாதிரி தெரியுதா என்று கமெண்ட் செய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress priya bhavani shankar new clicks viral

Best of Express