Advertisment

ரெக்க மட்டும் இருந்தா நீங்க தேவதைதான்... பிரியங்கா மோகன் வைரல் க்ளிக்ஸ்

சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், படத்தில் நடித்த பிரியங்கா தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

author-image
WebDesk
New Update
Priyanka Mohan

பிரியங்கா அருள் மோகன்

டாக்டர் பட நாயகி பிரியங்கா அருள் மோகன் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் பிரியங்கா அருள் மோகன்.

Advertisment
publive-image

கடந்த 2019-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒன்த் கதே ஹீலா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, நானிஸ் கேங்லீடர் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், அடுத்து ஸ்ரீகாரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நெல்சன் இயக்கிய இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், பிரியங்காவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தது.

publive-image

அதன்பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், படத்தில் நடித்த பிரியங்கா தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

publive-image

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் தயராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், இயக்குனர் ராஜேஷ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

publive-image

அதேபோல் வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ள பிரியங்கா மோகன் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

publive-image

இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment