Advertisment

சிறகை விரித்து பறக்க துடிக்கும் நடிகை... ராஷி கண்ணா ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்

மோகன்லாலுடன் நடித்த வில்லன் படத்தின் மூலம் மலையாளத்திலும், நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானவர் ராஷி கண்ணா.

author-image
WebDesk
New Update
Raashi Khanna

2013-ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தொடர்ந்து நாகர்ஜூன் நடிப்பில் வெளியான மனம் படத்தின் மூலம் தெலுங்கு படத்தில் அறிமுகமானா,

Advertisment
publive-image

இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்த ராஷி அடுத்து ஜோரு, ஜில், ஷிவம், பெங்கால் டைகர், ஜெய் லவ குசா, ராஜா தி கிரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

publive-image

மோகன்லாலுடன் நடித்த வில்லன் படத்தின் மூலம் மலையாளத்திலும், நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானவர் ராஷி கண்ணா.

publive-image

தொடர்ந்து தமிழில், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

publive-image

தமிழ் தெலுங்கு மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா தற்போது இந்தியில் யோதா, தமிழில் பா. விஜயுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

publive-image

படங்களில் மட்டும்லாமல் வெப் தொடரில் நடித்து வரும் ராஷி கண்ணா, ருத்ரா மற்றும் ஃ.பார்சி என்ற ஆகிய தொடரில் நடித்துள்ளார். இதில் சமீபத்தில் வெளியான ஃபார்சி நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராஷி கண்ணா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment