என் வாழ்க்கையே இதுதான்: நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்; ரச்சிதா மகாலட்சுமி உருக்கம்!

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Rachithra Keamr

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். சீரியல் மூலம் பிரபலமான அவர், ஒரு கட்டத்தில் கன்னட பட வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் சின்னத்திரைக்கு என்டரி ஆனார்.

Advertisment

ரீ-என்டரியில் ரச்சிதா ஜீ தமிழ் சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமல்லாமல், உப்புக்கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திய ரச்சிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது காதல் கணவர் குறித்து எதுவும் பேசவில்லை. சமீபத்தில் தனது கணவர் தினேஷூடன் விவாகரத்து பெற முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், தினேஷ் தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்வதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதனிடையே சமீபத்தில் கன்னடத்தில் வெளியான ரங்கநாயகா என்ற படத்தில் நடித்திருந்த ரச்சிதா மகாலட்சுமி, தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில், தெலுங்கில் தள்ளி மனசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, கேமராவை தொட்டு வணங்கும் வீடியோ பதிவை வெளியிட்டு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

அந்த பதிவில், என்னை வாழ வைப்பது என் வேலை மட்டும் தான். எனது வேலையை செய்ய தூண்டும் எனது ஆர்வத்தை சரியாகவும், நேர்த்தியாகவும், திருப்தியாகவும் உணர்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது வேலையை சரியாக செய்வதில் எப்போதும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். தள்ளி மனசு படத்தில் விரைவில் பல அப்டேட்கள் வரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரச்சிதா மகாலட்சுமிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

tamil serial Actress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: