க்ளாசிக் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த சகோதரிகளில் முக்கியமானவர்கள் ராதா அம்பிகா. இரும் தனித்தனியாக பல படங்களில் நடித்திருக்கும் நிலையில், சகோதரிகளாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளனர். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இருவருமே ஜோடியாக நடித்துள்ளனர்.
அதேபோல் வாழ்க்கை என்ற படத்தில் அம்பிகாவும், முதல் மரியாதை படத்தில் ராதாவும் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் சினிமாவில் உச்சம் தொட்டதை போல் ராதாவின் மகள்கள் அடுத்தடுத்து திரைப்படங்களில் அறிமுகமாகி வெற்றி பெற்றிருந்தாலும் அதன்பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் தங்களது தொழிலை கவனிக்க சென்றுவிட்டனர்.
அதேபோல், வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்த ராதா தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும், அம்பிகா சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் அருவி சீரியலில் நடித்து முடித்த அம்பிகா தற்போது மல்லி சீரியலில், நளினி, பூர்ணிமா பாக்யாராஜ் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். 90-களின் தொடக்கத்தில் ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்துகொண்ட ராதாவுக்கு கார்த்திகா விக்னேஷ் துளசி என 3 பிள்ளைகள் உள்ளனர்.
இதில், கோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்திகாவுக்கு முதல் படம் வெற்றியாக அமைந்திருந்தாலும் அதன்பிறகு வாய்ப்பு கிடைக்காததால், சமீபத்தில் ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
இதனிடையே கார்த்திகா நாயர் தனது 31-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அவரது அம்மா ராதா வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இன்ஸ்டாகராமில் ராதா தனது கணவர் ரோஹித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் வாழ்க்கையில் இது போன்ற அற்புதங்கள் மேலும் மேலும் நிரம்பட்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“