New Update
/indian-express-tamil/media/media_files/SnKzWVVKfVSRN23ArkrZ.jpg)
பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம்
பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம்
இணையதள பயன்பாடு அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் பழம்பெரும் நடிகர்கள் தங்களது இளமைகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு நடிகையின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்த இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
அதே சமயம் இவரது அம்மா 80-களில தொடங்கி 2000-ம் ஆண்டு காலக்கட்டம் வர தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் தான் நடிகை ராதா. தமிழ் சினிமாவில் ராதா – அம்பிகா என்றால் தெரியாத ஆட்களே இல்லை என்று சொல்லாம். திருமணத்திற்கு ராதா நடிக்கவில்லை என்றாலும், அம்பிகா தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது ராதா தனது மகள்களின் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், 2009 ஆம் ஆண்டு நாக சைதன்யாவுடன் இணைந்து ஜோஷ் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ஜீவா நடித்த கோ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான கார்ததிகாவுக்கு முதல் படமே பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளத்தில் மகரமஞ்சு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததற்காக பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
தொடர்ந்து தெலுங்கில் தம்மு மலையாளத்தில் கம்மத் & கம்மத், மற்றும் கன்னடத்தில் பிருந்தாவனம் போன்ற படங்களில் நடித்த கார்த்திகா கடைசியாக தமிழ் சினிமாவில் 2015-ல் வெளிவந்த புறம்போக்கு என்கிற பொதுவுடமை, படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார். கார்த்திகா நாயர் சமீபத்தில் ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் மலையாள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.
தென்னிந்திய திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நட்சத்திர விழா தொடர்பான புகைப்படங்களை, கார்த்திகா நாயர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இந்த திருமண விழாவில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, ரேவதி, ராதிகா சரத்குமார் மற்றும் சுகாசினி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த நட்சத்திரங்களின் சங்கமமாக மாறியது. மேலும், புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதிப்பதற்காக ஜாக்கி ஷெராஃப் திருமணத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.