New Update
/
80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதாவின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1981-ம் ஆண்டு வெளியான படம் அலைகள் ஓய்வதில்லை. இயக்குனர் மணிவண்ணனின் கதையம்சத்தில் உருவான இந்த படத்தின் மூலம் கார்த்திக் – ராதா என இரு நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து இருவருக்கும் பட வாய்ப்பு குவிந்து வந்தது.
குறிப்பாக நடிகை ராதா அலைகள் ஒய்வதில்லை படத்தை தொடர்ந்து, பாரதிராஜாவின் இயக்கத்தில் டிக்டிக்டிக், அதிசய பிறவிகள், கோபுரங்கள் சாய்வதில்லை, பாயும் புலி என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், மோகன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
பாரதிராஜ இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை திரைப்படத்தில், சிவாஜியுடன் இணைந்து நடித்த ராதாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்படடது. 1981-ம் ஆண்டு சினிமவில் அறிமுகமான ராதா, 1991-ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை முடித்துக்கொண்டு திருமண வாழ்க்கையில் புகுந்தார். 1991-ம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்ட ராதாவுக்கு கார்த்திகா, துளசி, உட்பட 3 பிள்ளைகள் உள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 100 படங்களுக்கு மெல் நடித்துள்ள ராதா, தற்போது டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வருகிறார். இவரது மூத்த மகள் கார்த்திகாவுக்கு சமீபத்தில் பிரம்மாண்டாக திருமணம் நடைபெற்றது. இதனிடையே தற்போது ராதா – ராஜசேகரன் நாயர் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் நடிகை ராதாவா, திருமண புகைப்படத்தில் சூப்பராக இருக்கிறாரே என்ற கருத்துக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.