/indian-express-tamil/media/media_files/2025/07/23/radha-2025-07-23-19-11-28.jpg)
இன்றைய காலக்கட்ட சினிமாவில் நான் ஹீரோயினாக இருந்திருந்தால், இந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, ரொமான்ஸ், டான்ஸ் ஆடியிருப்பேன் என்று முன்னாள் நடிகை ராதா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகைகள் ராதா மற்றும் அம்பிகா இருவரும். இருவரும் தனித்தனியாகவும், ஒன்றாக இணைந்தும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். அதேபோல் இருவருமே சிவாஜிக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அதேபோல், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். ராதா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார்.
அதே சமயம், அவரது சகோதரி அம்பிகா தற்போது சினிமாவில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சீரியல்களிலும் நடித்து திரைத்துறையில் தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சகோதரி நடிகைகளாக வலம் வந்த இவர்களில் ஒருவர் மட்டும் இப்போது திரையுலகில் நீடித்து வந்தாலும், ராதா அவ்வப்போது சமூகவலைதகளில் வெளியிடும் பதிவுகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அந்த வகையில் ஒரு நேர்காணலில் பேசிய ராதா, இன்றைக்கு தான் ஹீரோயினாக இருந்திருந்தால் எந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருப்பேன் என்பது குறித்து ஒரு பட்டியலை கொடுத்துள்ளார். அதில், எனக்குத் அஜித் சார் ரொம்ப பிடிக்கும், கமல் சாருக்கு பிறகு அவர் மேல் ஒரு இது. அப்புறம் கார்த்தி. சூர்யா தம்பி கார்த்திக் என்னமோ தெரியால அவர் மீது க்ரஷ் கிடையாது கிடையாது. அவரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு விருப்பம் இருக்கும்.
அப்புறம் விஜய்யுடன் சேர்ந்து நடனமாட வேண்டும். சூர்யாவுடன் சேர்ந்து அவருக்கு சமமான எமோஷ்னல் ரோல் பண்ண வேண்டும். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தால், சில நேரம் நாம் அவர்களது கதாநாயகியாகவே மாறிவிடுவோம். நான் அதிகம் கனவு காண்பவள் என்று நடிகை ராதா வெளிப்படையாக பேசியுள்ளார்.
அஜித் கூட ரொமான்ஸ்?? விஜய் கூட டான்ஸ்?? வின்டேஜ் நடிகை ஓபன் டாக்.. #vlogscoimbatore #coimbatore #coimbatoreinfluencer...
Posted by Coimbatore Vlogs on Saturday, July 12, 2025
1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ராதா, 1991-ம் ஆண்டு சாந்தி எனது சாந்தி என்ற படத்துடன் தனது சினிமா வாய்ப்பை முடித்துக்கொண்டார். தான் நடித்த 10 வருடங்களும் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். 1991-ம் ஆண்டு ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்துகொண்ட ராதாவுக்கு கார்த்திகா, துளசி உட்பட 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கார்த்திகா, துளசி இருவரும் ஓரிரு படங்களில் நடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.