32 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நடிகை ராதாவின் திருமண வரவேற்பு தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், முன்னணி நடிகர்கள் பலரும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.
1981-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர் நடிகை ராதா. தொடர்ந்து சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ராதா 80-90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை ராதா கடைசியாக 1991-ம் ஆண்டு சாந்தி எனது சாந்தி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ராஜசேகரன் நாயர் என்பரை 1991-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ராதா அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.
இவருக்கு கார்த்திகா துளசி என இரு மகள்கள் உள்ளனர். இதில் கார்த்திகா தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கோ, அன்னக்கொடி வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். துளசி கவுதம் கார்த்திக்கின் கடல், ஜீவாவின் யான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு இருவருக்மே படவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.
இதனிடையே கடந்த 1991-ம் ஆண்டு எடுக்கப்பட்ட நடிகை ராதாவின் திருமண வரவேற்பு தொடர்பான வீடியோ காட்சி டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் தளத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ராதாவுடன் நடித்த முன்னணி நடிகர்கள் பலரும் இருக்கின்றனர். அதில் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் பார்த்திபன் – சீதா, ராமராஜன் நளினி ஆகியோர் ஒன்றாக இணைந்து கலந்துகொண்டுள்ளனர்.
அதேபோல் நடிகர் சத்யராஜ், விஜயகாந்த் இருவரும் தனியாக வந்துள்ளனர். விஜயகாந்துக்கு முன்பே வந்துள்ள சத்யராஜ் அங்கு பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ராமராஜன் அங்கு வர இருவரும் பேசிக்கொள்கின்றனர். இறுதியான வரும் விஜயகாந்த் போட்டோவுக்கு போன் கொடுக்கும்போது சத்யராஜூவை கிண்டல் செய்யும் விதமா செய்கை செய்கிறார். அதன்பிறகு நடிகர்கள் அனைவரும் இணைந்த பேசிக்கொண்டுள்ளனர். இதில் நடிகை சரிகா, விஜயசாந்தி உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil