புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராதா : ஆனாலும் எஸ்.ஐ மீது பாயும் நடவடிக்கை

கணவர் துன்புறுத்துவதாக புகார் அளித்த நடிகை ராதா தற்போது தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணவர் துன்புறுத்துவதாக புகார் அளித்த நடிகை ராதா தற்போது தனது கணவர் மன்னிப்பு கேட்டதால் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவர் நடிகை ராதா (39). அதனைத் தொடர்ந்து கேம், அடாவடி, காத்தவாரயன் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர், முன்தினம், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்ஓன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த ஒன்றரை நானும் ஆண்டுகளாக எஸ்.ஐ வசந்தராஜாவும் கணவன் மனைவியாக வாழ்ந்துவருகிறோம்.

சமீபகாலமாக வசந்தராஜா, என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். எனவே வசந்தராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று குறிப்பிட்டிருந்தார். அதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறையினர், எஸ்.ஐ இருவரிடமும் விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில் எஸ்.ஐ வசந்தராஜா, தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை ராதா காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியது.

நடிகை ராதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், திருவான்மியூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ வசந்தராஜாவுடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் கணவன் மனைவியா வாழ்ந்துள்ளனர். ஆனால் ஏற்கனவே திருமணமாகிய வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினர் ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ராதா அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ வசந்தராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், ராதா, தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். ஆனாலும் முதல் மனைவி இருக்கும் போது எஸ்.ஐ வசந்தராஜா, நடிகை ராதாவை இரண்டாவதாக திருமணம் செய்த தகவல் வெளியாகியிருப்பதால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress radha withdraw the compliant against police

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express