Advertisment

நானும் என் காபியும்... கபாலி நடிகை ராதிகா ஆப்தே கியூட் க்ளிக்ஸ்

சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரஜினியின் கபாலி படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீ-என்டரி கொடுத் ராதிகா ஆப்தே இந்த படத்தில் ரஜினிக்கு இணையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Radhika Apte

ராதிகா ஆப்தே

தமிழகத்தின் வேலூரில் பிறந்து தற்போது இந்தி சினிமாவின் முன்னணி நடிகைககளில் ஒருவராக மாறியுள்ள ராதிகா ஆப்தே சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான வாஹ லைஃப் ஹோ டு ஆஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. தொடர்ந்து அன்டாஹென் என்ற படத்தின் மூலம் பெங்காலி மொழியில் அறிமுகமானார். ‘

publive-image

அடுத்து சமான்தர் என்ற படத்தின் மூலம் மராத்தியில் அறிமுகமான ராதிகா ஆப்தே, ரத்த சரித்திரம் படத்தின் 2 பாகங்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

publive-image

இந்த படம் அவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்தாலும் அதன்பிறகு ஆன் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

publive-image

இந்த படங்கள் அவருக்கு சரியாக கை கொடுக்காத நிலையில், தமிழில் சரியான வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. அதனால் இந்தியில் கவனம் செலுத்தி வந்தார்.

publive-image

சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரஜினியின் கபாலி படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீ-என்டரி கொடுத் ராதிகா ஆப்தே இந்த படத்தில் ரஜினிக்கு இணையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

publive-image

அதன்பிறகு சித்திரம் பேசுதடி 2 படத்தில் நடித்த ராதிகா ஆப்தே, தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான மிஸஸ் அன்டர்கவர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராதிகா ஆப்தே அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Radhika Apte
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment